×

ஒத்த ரூவா தர மாட்டேன்னு சொன்னது அப்போ… ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை ரூ.500 தந்தது இப்போ… இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் அண்ணாமலை, தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறார். தான், கோவைக்கு வரும்போது 2 தகரப் பெட்டியுடன்தான் வந்தேன், ரூ.7.96 கோடி சொத்து மதிப்பை குறைத்து தேர்தல் பிரமாண பத்திரத்தில் ரூ.1.12 கோடி என்று காட்டியது, கோவையில் 2 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்க திராவிட கட்சிகள் தான் காரணம், சவுமியா அன்புமணியின் பேத்திக்கு திருமணம் ஆன பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், எம்எல்ஏ கோட்டாவில் இன்ஜினீயரிங் சீட் வாங்கினார் உள்ளிட்ட பல்வேறு பொய்களையும், உளறல்களையும் தொடர்ந்து கூறி வருகிறார் அண்ணாமலை. இதனால் அரசியல் களத்தில் ஒரு காமெடி பீசாக அண்ணாமலை இருந்து வருவதாக சமூகதளவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு கோவை கோனியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த அண்ணாமலை, தனக்கு சால்வை அணிவித்த ஒரு வயதான மூதாட்டிக்கு ரூ.500 ரூபாய் டிப்ஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது, தனக்கு ஆரத்தி எடுக்கும் ஒரு பெண்ணுக்கு, ரூ.500 ரூபாய் நோட்டை, ஆரத்தி தட்டுக்கு அடியில் மறைத்து கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி
வருகிறது. கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, ஒரு ரூபாய்கூட செலவு செய்ய மாட்டேன் என மார்தட்டிய சில நாட்களிலேயே, ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ரூ.500 ரூபாய் நோட்டுகளை அவிழ்த்து விடுவது எப்படி..? என நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் வெச்சி செய்து வருகின்றனர்.

* விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை ரூ.500 கொடுத்தது தொடர்பான புகாரின்பேரில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, வீடியோவின் உண்மை நிலையை குறித்து கண்டறியவும், அதனை ஆய்வு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். காவல்துறை அளிக்கும் விளக்கத்தை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

* எல்லாம் கூட்டணி படுத்தும்பாடு: மோடிக்கு என்னை ரொம்ப பிடிக்கும்; ராமதாஸ் ‘ஓபன்’
தேஜ கூட்டணி சார்பில் விருத்தாசலத்தில் பாமக வேட்பாளரை ஆதரித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘உலகமே பார்த்து அதிசயிக்கக் கூடிய மனிதர் மோடி. தமிழகத்தில் தங்கர்பச்சான் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். இந்த கூட்டணி நல்ல நாணயமான, வித்தியாசமான, வெகுமதி உள்ள கூட்டணி. இப்போதெல்லாம் கட்சியை யார், யாரோ ஆரம்பிக்கிறார்கள். கொள்கை என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறார்கள். கொள்கை தெரியாமல் பல கட்சிகள் உள்ளன. என்னை மோடிக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி என மோடி குறிப்பிடுவார்,’ என்று கூறினார். பாஜ உடனான கூட்டணிக்கு முன்பு மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு ஜீரோ மதிப்பெண் கொடுப்பேன் என்று கூறிய ராமதாஸ் தற்போது இப்படி சொல்வது எல்லாம் கூட்டணி படுத்தும்பாடு என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

The post ஒத்த ரூவா தர மாட்டேன்னு சொன்னது அப்போ… ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை ரூ.500 தந்தது இப்போ… இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Coimbatore ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...